DTRY666EQS4Z
வணக்கம் நண்பர்களே,
சிறுவயதில் ஒரு ஐம்பது முறையாவது நான் படித்த வெகுநாளாக பதிவிட வேண்டும் என நினைத்து கொண்டிருந்த கதை இது சுஸ்கி- விஸ்கி குழுவினரின் ஒரு பேரிக்காய் போராட்டம். மினி லயனில் வெளிவந்த முழுவண்ண சித்திரக்கதை. சிறுவயதில் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் ஒருமுறை படித்து விடுவேன் பின் தூங்குவதற்கு முன் ஒருமுறை என இக்கதை மிகவும் கவர்ந்தது. வருத்தமான விஷயம் என்னவென்றால் இக்கதை என்னிடம் இல்லை. இணையத்தில் எப்படியோ தேடி பிடித்து எடுத்து விட்டேன். ஆனால் ஆங்கில மொழியில் கூட இல்லை. Dutch மொழியில் தான் கிடைத்தது. ஆனாலும் படங்களை பார்த்த போது சந்தோசமாக இருந்தது. சுஸ்கி - விஸ்கி கதாபாத்திரங்களை பற்றி காமிக்ஸ் பிரியன் பதிந்த பதிவை இங்கே பார்க்கவும்.இதன் அட்டை படத்தை தந்து உதவிய அ.கொ.தீ.க தலைவருக்கு மிக்க நன்றி.ஆங்கிலத்தில் வெளியான சுஸ்கி & விஸ்கி கதைகள் என்னவென்று காண இங்கே கிளிக்கவும். இனி கதைக்கு வருவோம்.

ஆர்வில் அங்கிள் இரவு பாருக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் வினோதமான பேரிக்காய் போல் தலை கொண்ட சிறிய குள்ளமான உருவத்தை காண்கிறார். அந்த உருவம் அங்கே வரும் அகதா ஆண்டியை கண்டு பயந்து ஓடுகிறது. அந்த சிறிய உருவத்தை ஆர்வில் அங்கிள்,அகதா ஆண்டி,சுஸ்கி மற்றும் விஸ்கி ஆகியோர் காரில் பின்தொடருகின்றனர். பயந்து ஓடும் அந்த பேரிக்காய் தலை புரபசர் பாரபாஸ் வீட்டில் புகுந்து விடுகிறது. அவர்களும் உள்ளே சென்று புரபசர் பாரபாஸ்ரிடம் விசாரிக்கிறார்கள். அவர் தான் கால இயந்திரத்தை வைத்து ஆராய்ச்சி செய்யும் போது அந்த இயந்திரத்தில் இருந்து திடீரென வெளிவந்து ஓடி விட்டதாகவும் கூறுகிறார்.அதே சமயம் அந்த பேரிக்காய் தலை புரபசர் வீட்டை விட்டு வெளியேறி ஓடுகிறது.

வணக்கம் நண்பர்களே,சிறுவயதில் ஒரு ஐம்பது முறையாவது நான் படித்த வெகுநாளாக பதிவிட வேண்டும் என நினைத்து கொண்டிருந்த கதை இது சுஸ்கி- விஸ்கி குழுவினரின் ஒரு பேரிக்காய் போராட்டம். மினி லயனில் வெளிவந்த முழுவண்ண சித்திரக்கதை. சிறுவயதில் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் ஒருமுறை படித்து விடுவேன் பின் தூங்குவதற்கு முன் ஒருமுறை என இக்கதை மிகவும் கவர்ந்தது. வருத்தமான விஷயம் என்னவென்றால் இக்கதை என்னிடம் இல்லை. இணையத்தில் எப்படியோ தேடி பிடித்து எடுத்து விட்டேன். ஆனால் ஆங்கில மொழியில் கூட இல்லை. Dutch மொழியில் தான் கிடைத்தது. ஆனாலும் படங்களை பார்த்த போது சந்தோசமாக இருந்தது. சுஸ்கி - விஸ்கி கதாபாத்திரங்களை பற்றி காமிக்ஸ் பிரியன் பதிந்த பதிவை இங்கே பார்க்கவும்.இதன் அட்டை படத்தை தந்து உதவிய அ.கொ.தீ.க தலைவருக்கு மிக்க நன்றி.ஆங்கிலத்தில் வெளியான சுஸ்கி & விஸ்கி கதைகள் என்னவென்று காண இங்கே கிளிக்கவும். இனி கதைக்கு வருவோம்.
![]() | ![]() |

ஆர்வில் அங்கிள் இரவு பாருக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் வினோதமான பேரிக்காய் போல் தலை கொண்ட சிறிய குள்ளமான உருவத்தை காண்கிறார். அந்த உருவம் அங்கே வரும் அகதா ஆண்டியை கண்டு பயந்து ஓடுகிறது. அந்த சிறிய உருவத்தை ஆர்வில் அங்கிள்,அகதா ஆண்டி,சுஸ்கி மற்றும் விஸ்கி ஆகியோர் காரில் பின்தொடருகின்றனர். பயந்து ஓடும் அந்த பேரிக்காய் தலை புரபசர் பாரபாஸ் வீட்டில் புகுந்து விடுகிறது. அவர்களும் உள்ளே சென்று புரபசர் பாரபாஸ்ரிடம் விசாரிக்கிறார்கள். அவர் தான் கால இயந்திரத்தை வைத்து ஆராய்ச்சி செய்யும் போது அந்த இயந்திரத்தில் இருந்து திடீரென வெளிவந்து ஓடி விட்டதாகவும் கூறுகிறார்.அதே சமயம் அந்த பேரிக்காய் தலை புரபசர் வீட்டை விட்டு வெளியேறி ஓடுகிறது.
அனைவரும் அதை தேடுகின்றனர் வீட்டில் இல்லாமல் போகவே காலஇயந்திரத்தில் எதாவது தகவல் கிடைக்கிறதா என பார்க்கின்றனர்.காலஇயந்திர திரையில் அந்த பேரிக்காய் தலை உருவத்தின் மணைவி தெரியவே அதனுடன் பேசுகின்றனர்.அவளது கணவன் திடீரென காணாமல் போய்விட்டதாக கூறவே அந்த பேரிக்காய் உருவத்தை மீண்டும் தேடுகின்றனர்.தேடலுக்கு பின் அதை நாய்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு வருகின்றனர்.பின் அதனிடம் விசாரிக்கும் போது தாங்கள் பேரிக்காய் தலையர்கள் தங்கபேரிக்காய் வளர்த்து வாழ்வதாகவும்,தங்களை விட பலமான எதிர் பேரிக்காய்தலையர்களின் கூட்டம் தங்கள் ராஜாவையும்,ராணியையும் கடத்தி வைத்திருப்பதாகவும், தங்கள் வியாபாரத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் கூறுகிறது. மேலும் ஒரு டிராகன் தங்கள் தங்கபேரிக்காய் தோட்டத்திற்கு தண்ணீர் வர விடாமல் தடுத்து கொண்டு இருப்பதாகவும் கூறுகிறது.இதை கேட்கும் குழுவினர் அதை மீண்டும் அங்கு கொண்டு சேர்ப்பதாக கூறுகின்றனர்.
![]() | ![]() |
பின் சிலநேரம் கழித்து ஆர்வில் அங்கிள் கால இயந்திரத்தின் ஒரு விசையை இழுக்கவே சுஸ்கி மற்றும் ஆர்வில் அங்கிள் அதனுள் இழுத்து செல்லப்பட்டு பேரிக்காய் தலையர்களின் உலகத்தை அடைகின்றனர்.அங்கே இருக்கும் டிராகனை சுஸ்கி கொன்று அடைத்து வைக்கப்பட்ட தண்ணீரை திறந்து விட்டு பேரிக்காய் தலையர்களின் தோட்டங்களுக்கு பாய செய்கிறான். இதை கண்ட பேரிக்காய் தலை கூட்டம் அவனை இளவரசனாக தேர்ந்தேடுகிறது.பின் இவர்களை காணாமல் தேடும் விஸ்கி அவர்கள் பேரிக்காய் தலையர்களின் உலகத்தில் இருப்பதாய் அறிந்து அவளும்,அகதா ஆன்ட்டியும் பேரிக்காய் தலையோடு பேரிக்காய் தலையர்களின் உலகத்தை அடைகின்றனர்.
![]() | ![]() |
பின் அங்கே அவர்களை தாக்க எதிர் பேரிக்காய் தலையர்கள் வருகிறார்கள். அவர்களை ஆர்வில் அங்கிள் அடித்து விரட்டுகிறார். சுஸ்கியின் பேரில் அவர்கள் மேல் மிளகு பொடி தூவியும் விரட்டுகின்றனர். நமது மினி லயனில் மூக்கு பொடி என்று இருந்ததாக நினைவு.அவர்களை விரட்டிய பின் பேரிக்காய் தலையர்கள் நிம்மதியாக வியாபாரம் பார்க்கின்றனர். ஆனால் சுஸ்கி மற்றும் விஸ்கி குழுவினரால் விரட்டியடிக்கப்பட்ட எதிர் பேரிக்காய் தலையர்கள் திரும்பி வருவார்கள் என பயப்படுகிறார்கள். சுஸ்கி மற்றும் விஸ்கி குழுவினர் எதிர் பேரிக்காய் தலையர்கள் படையெடுத்து சென்று போரிட்டு அவர்களது ராஜா,ராணியை மீட்க முடிவெடுக்கின்றனர்.அவர்களது கோட்டையை நோக்கி படையெடுத்து செல்கின்றனர்.![]() | ![]() |
படையெடுத்து சென்றவர்கள் வென்றார்களா? எவ்வாறு அவர்கள் கோட்டையை தகர்த்தார்கள்? பேரிக்காய் தலையர்களின் ராஜா,ராணியை மீட்டார்களா? என்பது மிக நகைசுவையுடன் செல்கிறது. ஆர்வில் அங்கிளின் ஜாடி பூதம், அது தரும் ஐடியா போன்றவை ரசிக்க வைக்கும்.


































