போன வருடம் ஜுன் மாதம் வெளியாகி ஆகி வசூலில் சக்கை போடு போட்ட Toy Story மூன்றாம் பாகத்திற்கு பிறகு இந்த வருடம் அதே ஜுன் மாதம் கார்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை பிக்ஸ்சர் வெளியிட்டுள்ளது. பிக்ஸ்சர் படம் என்றாலே கொண்டாட்டம் தான். Toy Story 3 யின் வெற்றி அடுத்த பிக்ஸ்சர் படம் எப்போது வரும் என அனைவரையும் நினைக்க வைத்தது. அடுத்த படம் Cars 2 என அறிந்த போது ஆவல் அதிகரித்தது. மேலும் இது toy stroy க்கு அடுத்து இரண்டாம் பாகம் வரும் படம்.



